Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் விதியெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் பொருந்தாது… ஷிவம் துபேவைக் கலாய்த்த கே எல் ராகுல்!

vinoth
சனி, 3 ஆகஸ்ட் 2024 (09:18 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 8 விக்கெட்களை இழந்து 230 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு மிகச்சிறந்த தொடக்கத்தை ரோஹித் ஷர்மா கொடுத்தார். ஆனால் அதன் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். இதனால் இறுதிகட்டத்தில் போட்டி பரபரப்பாகி இந்திய அணி 230 ரன்களில் இருக்கும்போது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் போட்டி டிரா ஆனது

இந்த போட்டியில் கே எல் ராகுல் தனது நகைச்சுவையான கமெண்ட் ஒன்றால் வைரலாகியுள்ளார். ஷிவம் துபே பந்துவீசும் போது பேட்ஸ்மேனுக்கு வெளியே சென்ற பந்துக்கு நடுவர் அகலப்பந்து என்று அறிவித்தார். ஆனால் தான் ஏதோ சத்தத்தைக் கேட்டதாக ஷிவம் துபே ரோஹித் ஷர்மாவிடம் ரிவ்யூக்கு செல்லலாம் எனக் கூறினார்.

அப்போது அங்கு வந்த கீப்பர் ராகுல் “வைட் பந்துக்கு  ரிவ்யூ கேட்பதெல்லாம் ஐபில் தொடரில் மட்டும்தான். ஒருநாள் போட்டிகளில் அல்ல” என ஜாலியாக அவரை நக்கல் செய்தார். இது சம்மந்தமான காணொளி துணுக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments