Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியிலேயே போட்டியில் இருந்து விலகிய ஹேசில்வுட்… இந்திய அணிக்கு ஆறுதல்!

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (09:59 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

அதன் பின்னர் ஆடிவரும் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கே எல் ராகுல் தவிர மற்ற அனைவரும் சொதப்பியதால் மோசமான நிலையில் உள்ளது. தற்போது இந்திய அணி 170 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். அவர் இந்த போட்டியில் 6 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பந்து வீசினால் காயம் அதிகமாகும் என்பதால் அவர் இனி பந்து வீச மாட்டார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஆன டேரன் சமி!

சதத்தை நோக்கி கே.எல்.ராகுல்.. மீண்டும் ஏமாற்றிய ரோகித் சர்மா.. ஸ்கோர் விவரங்கள்..!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments