Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

vinoth
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:44 IST)
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம்.

இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அவர் நேற்று அவர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற இளம் நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments