Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ராவின் துணைக் கேப்டன் பதவி பறிப்பு… பிசிசிஐ எடுத்த முடிவு!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (08:06 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்கான அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்ட நிலையில் பும்ரா வகித்து வந்த துணைக் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கு துணைக் கேப்டனாக யாரையுமே பிசிசிஐ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாகப் பங்களித்து வரும் பும்ரா ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவரிடம் இருந்து துணைக் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments