Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற பும்ரா..

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (17:19 IST)
பிசிசிஐயின் சிறந்த சர்வதேச வீரருக்கான விருதுகளை தட்டி சென்ற ஜஸ்பிரித் பும்ரா.

2018-19 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். மேலும் 2018-19 ஆம் சீசனில் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தோருக்கான சர்தேசாய் விருதையும் பும்ரா பெற்றுள்ளார். இந்த விருதை புஜாரவும் பெற்றுள்ளார்.

அதே போல், 2018-19 ஆம் ஆண்டிற்கான சி.கே.நாயுடு கோப்பைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறந்த சர்வதேச வீராங்கனை விருதை சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் பெற்றார். சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருதை மயங்க் அகர்வால் பெற்றார். அதே போல் சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை ஷஃபாலி வெர்மா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments