Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகச்சிறந்த பினிஷர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் கோலிதான்… ஜாம்பவான் பவுலர் பாராட்டு!

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (08:29 IST)
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். அந்த வகையில் இப்போது உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கோலிக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டுதான் அவர் தன்னுடைய டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்சியை துறந்தார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன்சியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். இப்போது ஒரு வீரராக மட்டும் அணியில் விளையாடி வருகிறார். இன்னும் 5 ஆண்டுகளாவது கோலி இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோலி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் “உலகின் மிகச்சிறந்த பினிஷர் என்றால் அது கோலிதான். ஏனென்றால் அவரைவிட வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிகமாக சாதித்தவர்கள் யாரும் இல்லை.” எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments