ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

vinoth
சனி, 23 நவம்பர் 2024 (14:58 IST)
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி தற்போது நடந்து வர்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய நிதீஷ்குமார் எட்டாவது வீரராக இறங்கி 41 ரன்கள் சேர்த்து இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்ட காரணமாக இருந்தார்.

இதையடுத்து ஆடிய ஆஸி அணியும் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. இந்திய அணிக் கேப்டன் பும்ரா மிகச்சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியா டாப் ஆர்டரை சிதைத்தார். இந்நிலையில் இரண்டாம் நாளில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இதையடுத்து இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்துள்ளனர். மிகச்சிறப்பாக ஆடிவரும் ஜெய்ஸ்வால் தற்போது 181 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரை அவுட் ஆக்க ஆஸி வேகப்பந்து வீச்சாளர்கள் போட்ட எந்த திட்டமும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில் ஆஸி அணியின்  மின்னல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீசும் போது அவரை சீண்டும் விதமாக ஜெய்ஸ்வால் “உங்கள் பந்து மிகவும் பொறுமையாக வருகிறது” எனக் கூறினார். அதைக் கேட்ட ஸ்டார்க் சிரிப்பை ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments