ஜெய்ஸ்வாலின் சதமா? சாம்சனின் அரை சதமா? – ராஜஸ்தான் அணியின் ரகசிய மோதல்!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (08:40 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் போட்டியில் ஜெய்ஸ்வால் – சாம்சன் பார்ட்னர்ஷிப்பில் நடந்த ஒரு ரகசிய போட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவை எட்டி வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவை 149 ரன்களில் சுருட்டிய ராஜஸ்தான் அணி, அடுத்து சேஸிங்கில் 13 ஓவர்களிலேயே 151 ரன்களை குவித்து கொல்கத்தாவை வீழ்த்தியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஆட்டம் பலரையும் சொக்க வைத்துவிட்டது. முக்கியமாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலி அபாரமான ஆட்டம். குறைந்த (13) பந்துகளில் அரை சதம் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால்.

ஜோஸ் பட்லர் ஆரம்பமே அவுட் ஆனாலும் பிறகு வந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வாலுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து சிக்ஸர்களை பறக்க விட தொடங்கினார். 150 ரன்களே இலக்கு இருந்த நிலையில் கொல்கத்தா அணி வைட் மூலமாக ஏற்கனவே 4 ரன்களை பரிசளித்து விட்டனர். சஞ்சு சாம்சன் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி கிட்டத்தட்ட ஒரு அரை சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.



அதே சமயம் மறுபக்கம் ஜெய்ஸ்வால் ‘அரைசதம்லாம் ஒரு விஷயமா இன்னைக்கு சதமே அடிக்கிறோம்’ என 100 ரன்களை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். அவருக்கு பரிசாக கல்கத்தா ஓவர் த்ரோ செய்து ஒரு பவுண்டரியையும் கொடுத்துவிட்டது. இதனால் கடைசியாக இருக்கும் ரன்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது சஞ்சு, ஜெய்ஸ்வால் இருவரில் யாராவது ஒருவர்தான் அரை சதமோ, சதமோ பூர்த்தி செய்ய முடியும் என்ற சூழலே இருந்தது.

யார் அடிக்க போகிறார்கள் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே எகிற ஆரம்பித்திருந்த அந்த கடைசி தருணம் 147 ரன்கள் குவித்தாயிற்று. ஜெய்ஸ்வால் தனது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்திருந்தால் அவருக்கு 100 ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அது பவுண்டரி ஆனதால் 98 ரன்களுடன் ராஜஸ்தான் வெற்றி பெற்று ஆட்டம் முடிந்தது. சஞ்சு சாம்சனும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்யாமல் 48 ரன்களில் முடித்தார். இருவருக்குமே தங்களது இலக்கை முடிக்க 2 ரன்கள் தேவைப்பட்டபோது தாராளமாக பந்துகள் இருந்து ரன்கள் இல்லை.

Edit by prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments