Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வணக்கம் சென்னை’… தாய்வீட்டுக்கு வந்த ஜடேஜா!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:16 IST)
இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய ஜடேஜா அதன் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் இப்போது மீண்டும் உடல்தகுதியைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத அவரை உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடல்தகுதியை நிருபிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ள ஜடேஜா “வணக்கம் சென்னை” என தமிழில் ட்வீட் செய்துள்ளார். சவுராஷ்ட்ரா அணிக்காக 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார் ஜடேஜா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments