Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (13:41 IST)
நேற்றையப் போட்டியில் இஷான் கிஷான் தன்னுடைய விக்கெட்டை சர்ச்சையான முறையில் இழந்தது இன்னும் சர்ச்சையாக ஓடிக் கொண்டிருக்கிறது. பலரும் அதற்காக இஷான் கிஷான் மற்றும் நடுவர் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்தது. ஐதராபாத் அணி பேட்ஸ்மேன் இஷான் கிஷான் பேட் செய்யும் போது தீபக் சஹார் வீசிய பந்தை பின்பக்கமாக தட்டிவிட நினைத்தார். ஆனால் பந்து கீப்பர் வசம் சென்று தஞ்சமடைந்தது. இந்த பந்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே விக்கெட்டுக்கு அப்பீல் செய்யாத போதும் இஷான் கிஷான் தானாகவே களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் குழம்பிய நடுவர் பின்னர் அவர் செல்வதைப் பார்த்து அவுட் என அறிவித்தார். ஆனால் பின்னலையில் பந்து அவர் பேட்டில் படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்நிலையில் இந்த விக்கெட் சம்மந்தமாகப் பேசியுள்ள வீரேந்திர சேவாக் “இது போன்ற நேரத்தில் நம் மூளை சரியாக வேலை செய்யாது. அந்த நேரத்தில் குறைந்தபட்சம் நீங்கள் நடுவரின் முடிவுக்காவது காத்திருக்க வேண்டும். நடுவர் தன் வேலையை செய்யதான் சம்பளம் வாங்கிறார். அவரை அவர் வேலையை செய்ய விடுங்கள்” எனக் கூறியுள்ளார்.” எனக் கூறி இஷான் கிஷானை விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

தொடருமா சின்னசாமி சாபம்.. முடியுமா ஆர்சிபி சோகம்? - இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்!

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

‘வந்துட்டோம்னு சொல்லு’… தொடர்ந்து நான்கு வெற்றிகள்… புள்ளிப் பட்டியலில் மேலே வந்த பல்தான்ஸ்!

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments