Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையான விமர்சனங்களை சந்திக்கும் இஷான் கிஷானின் தேர்வு!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (07:40 IST)
சில தினங்களுக்கு முன்னர் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இப்போது ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் மற்றும் அடுத்த மாதம் தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகியவற்றில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லண்டனில் நடக்கும் போட்டியில் ராகுலுக்குப் பதில் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் அல்லது ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்பட்ட நிலையில் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவரின் தேர்வு குறித்து சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற ஒரு முக்கியமான போட்டியில் இஷான் கிஷானின் தேர்வு சரியாக இருக்காது என் பலரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments