Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சிக் கோப்பை புறக்கணிப்பு…. இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஒப்பந்தம் ரத்தா?

vinoth
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (09:34 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார்.

அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி இப்போது அவர் ரஞ்சி கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இதே போல மும்பையைச் சேர்ந்த மற்றொரு வீரரான இஷான் கிஷனும் ரஞ்சிக் கோப்பை தொடரை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ, இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸின் செண்ட்ரல் காண்ட்ராக்டை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதால் இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்று  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments