Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹர்பஜன், ரோஹித் வரிசையில் ’காதல் திருமண’ பந்தத்தில் இணையும் இர்ஃபான் பதான்

ஹர்பஜன், ரோஹித் வரிசையில் ’காதல் திருமண’ பந்தத்தில் இணையும் இர்ஃபான் பதான்

ஹர்பஜன், ரோஹித் வரிசையில் ’காதல் திருமண’ பந்தத்தில் இணையும் இர்ஃபான் பதான்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (17:29 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சவுதி அரேபியாவைச் சேர்ந்த காதலி சஃபா பாய்க்-யை மணந்துள்ளார்.
 

 
இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட இர்ஃபான் பதான் தற்பொழுது பரோடா அணிக்காக விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்த்ய அணியின் ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்களது காதலியை மணந்தனர். அந்த வரிசையில் தற்பொழுது இரஃபான் பதானும் இணைந்துள்ளார்.
 
31 வயதான இர்ஃபான் பதானுக்கும், சவுதியின் ஜீட்டா நகரைச் சேர்ந்த 21 வயதான மாடல் அழகி சஃபா பாய்க்-கும் மெக்காவில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் சந்தித்துக்கொண்டபோது காதலை வளர்த்துள்ளனர்.
 
எளிய முறையில் நடந்து முடிந்துள்ள திருமண புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபான் பதான் வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் மிக அழகான கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக விளையாடி 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1544 ரன்களும், 173 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 29 டெஸ்ட் போட்டிகளில் 1,105 ரன்களும், 100 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil