Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழுகுகளை வீழ்த்திய அயர்லாந்து; 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தோல்வி

கழுகுகளை வீழ்த்திய அயர்லாந்து; 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தோல்வி
, புதன், 25 பிப்ரவரி 2015 (19:00 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
 
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16ஆவது லீக் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

 
இதன் படி முதலில் களம் இறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷைமன் அன்வர் 83 பந்துகளில் (10 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) 106 ரன்கள் எடுத்தார்.
webdunia

 
பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக வில்சன் 69 பந்துகளில் (9 பவுண்டரிகள்) 80 ரன்களும், ஓ பிரையன் 25 பந்துகளில் (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 50 ரன்களும் எடுத்தனர்.
 
இதன் மூலம் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனியை வீழ்த்தியது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது 3ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எடுத்த 285 ரன்களே அதன் அதிகப்பட்சமாகும்.
 
webdunia

 
இந்த ஆட்டத்தில் 7ஆவது விக்கெட்டுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் அம்ஜத் ஜாவட் - ஷைமன் அன்வர் இணை 107 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 7ஆவது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகப்பட்ச பதிவாக இது அமைந்துள்ளது.
 
இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸின் ஜாக்கப்ஸ் - சர்வான் இணை குவித்த 98 ரன்களே அதிகப்பட்ச ரன் குவிப்பாக அமைந்திருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil