Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் விடுவிப்பு

Webdunia
சனி, 25 ஜூலை 2015 (17:48 IST)
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா விடுவிக்கப்பட்டனர்.
 

 
இதுகுறித்து சூதில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வீரர்களின் கருத்தாவது:-
 
அஜித் சண்டிலா:- ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட அஜித் சண்டிலா கூறுகையில் தன் மீது குற்றம் சாட்டப்பட்டது ஒரு கெட்ட கனவாக தமக்கும் தனது குடும்பத்துக்கும் இருந்தது. இந்த தீர்ப்புக்கு பின்னர் தான், தமக்கு நிம்மதி கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
 
ஸ்ரீசாந்த்:- தங்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என நிருபிக்கப்பட்டுள்ளது. கடவுளின் தயவால் மீண்டும் கிரிக்கெட்டுக்கு நான் வருவது மகிழ்ச்சியை தருகிறது என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நான் ஒரு கிரிக்கெட் வீரர். எனவே எனது பயிற்சியை நான் தொடங்க உள்ளேன். மேலும் இதுகுறித்து பிசிசிஐ அனுமதி தர வேண்டும் எனவும் ஸ்ரீசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அங்கீத் சவான்:- ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஈடுபட்டதாக இருந்த பதற்றம் தணிந்தது. மேலும் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்ற ஏமாற்றமும் தற்போது தணிந்தது. எனது எதிர்காலத்தை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணிப்பேன் என்று அங்கீத் சவான் தெரிவித்துள்ளார்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments