Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் பிளே ஆப் போட்டி: சேவாக் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

Webdunia
சனி, 27 மே 2023 (19:56 IST)
நடப்பு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் 129 ரன்கள் குவித்த நிலையில் அவர் சேவாக் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல்-2023, 16வது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3விக்கெட் இழப்பிற்கு 233  ரன்கள் எடுத்து, மும்பைக்கு 234 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. இந்த அணியின்  சுப்மன் கில் 129 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து, தோற்றது.

இந்த நிலையில், பிளே ஆப் சுற்றின் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரேந்திர சேவாக்கின் சாதனையை சுப்மன் கில்(129) முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரரான போட்டியில் சேவாக் 122 ரன்கள் எடுத்து குறிப்பிடத்தக்கது.

நாளை ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments