Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் -2021 - பார்வையாளர்களுக்கு அனுமதி!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (16:00 IST)
ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்க உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொரோனா காலத்தில் பல நாடுகளில் இருந்து வரும் ரசிகர்களுக்கு இந்த விளையாட்டு ஒரு முக்கிய பொழுதுபோக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments