Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL-2020 ;சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி...ஆர்சிபி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (23:36 IST)
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே 2020 ஐபில்  போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் நடைபெற்று  வருகிறது.

மாலை 7 மணிக்கு டாஸ் ஜெயித்த வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கோலிவியின் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சாதனை படைக்குமா இல்லை வார்னர் வானவேடிக்கை நிகழ்த்துவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்தனர்.

இந்நிலையில்,  பெங்களூரு அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து,  ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

பெங்களூர் அணியில், தேவ்தத் படிக்கல் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் மொத்தம் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்ஸ் 29 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 51 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து,  ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் அணியில் நடராஜன் , அபிஷேக் சர்மா, விஜய் சங்கர் உள்ளிட்ட வீர்கள் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில் சன்ரை ஐதராபாத்  அணியின் நல்ல வலுவான பேட்டிங் அடித்தளம் இருந்த போதிலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். விஜய் சங்கர் ரசிகர்களை ஏமாற்றினார்.

எனவே, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. எனவே 10 ரன்கள் வித்தியாசத்தில் கோலியின் பெங்களூர் ராயல் சேலஞர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments