Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பாஜிக்கு நேத்து பைத்தியம் பிடிச்சிருச்சு!" - டுவிட்டரில் ஜாலி கமெண்ட் அடித்த சேவாக்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2015 (19:15 IST)
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங்கின் அதிரடி, எதிர் அணி வீரர்களை மிரட்டியது.
 

 
இக்கட்டான சூழலில் களமிறங்கிய ஹர்பஜன் சிங், கிடைத்த பந்தையெல்லாம் சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விளாசிக் கொண்டிருந்தார். வெறும் 24 பந்துகளை மட்டுமே சந்தித்த ஹர்பஜன், 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 64 ரன்களை அடித்தார்.
 
மேலும் மிக வேகமாக (19 பந்துகளில்) அரைதசம் அடித்த மும்பை அணி வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார்.
 
நேற்றைய ஆட்டத்தில், அனுரீத் சிங் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்களை (ஹாட்ரிக் சிக்ஸர்) ஹர்பஜன் அடிக்க, மைதானத்தில் பீல்டிங்கில் இருந்த சேவாக்கிற்கு சிரிப்பு தாள முடியவில்லை. ஹர்பஜன் சிங்கின் இந்த அதிரடியை மிகவும் ரசித்த வீரேந்திர சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில், 'பாஜிக்கு நேற்று பைத்தியம் பிடிச்சிருச்சு!' என்று ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளார்.
 
ஹர்பஜன் சிங் அவுட் ஆகவில்லையென்றால், நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இறுதியில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் செய்த தவறு… இடத்தை மாற்றிய கம்பீர்!

Under 19 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டம்

நான் எங்கே இருந்தாலும் கேமிராமேன் கண்டுபிடித்து விடுகிறார்.. மீம்ஸ் குறித்து காவ்யா மாறன்

இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் அறிவிப்பு… ஆர்ச்சர் இடம்பெற்றாரா?

அம்மா போட்ட பவுலிங்.. க்ளீன் போல்ட் ஆன ஸ்ரேயாஸ் அய்யர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

Show comments