என் பேட்டிங்கில் எனக்கே திருப்தியில்லை… இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில்!

vinoth
வெள்ளி, 26 ஜூலை 2024 (16:20 IST)
நடந்து முடிந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்குக் கூட தேர்வாகாத ஷுப்மன் கில் தற்போது ஒருநாள் மற்றும் டி 20 அணிகளுக்கான துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர்தான் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக வரப்போகிறார் என்பதை நாம் சூசகமாக புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் டி 20 போட்டிகளில் ஆட்ட அணுகுமுறை அதிரடியாக மாறி வரும் நிலையில் அவருடைய நிதானமான பேட்டிங் போக்கு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் பற்றி பேசியுள்ள அவர் “டி 20 உலகக் கோப்பைக்கு முன்பாக சில போட்டிகளில் என்னுடைய பேட்டிங் எனக்கே திருப்தி அளிக்கவில்லை.

அடுத்த உலகக் கோப்பைக்குள் குறைந்தது 30 போட்டிகளில் நாங்கள் விளையாடவுள்ளோம். அதற்குள் என்னுடைய பேட்டிங்கை மெருகேற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments