Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வெற்றி...ஹீரோ அஸ்வின் டுவீட்...சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:39 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
 
அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் ஆட்டத்தின் இறுதியில் வெற்றிபெற உள்ள தருவாயில் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் பிரபல மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் வருவது போல தோள்பட்டையை ஆட்டி ஆடினார்.
 
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல்  டெஸ்டில் இந்தியா இங்கிலாந்து அணியுடன் தோற்றது. எனவே இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் சன் இங்கிலாந்து புகழ்ந்து இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது கூற்றை பொய்ப்பிக்கும்படி,இன்று இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
 
இந்த வெற்றியை இந்திய அணி வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 
 
அஸ்வின் இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார் அவர்  தனது பேட்டிங்கால் எதிரணியைத் திணறடித்து சதம் அடித்ததுடன், எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 
 
இப்போட்டி குறித்து  தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நான் இப்போதும் இப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை; மைதானத்தில் குழுமியிருந்த  கிரிக்கெட் ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவாக உணர வைத்தனர். சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments