Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா கலர் ஜெர்ஸியும் இனி நீலம்தான்… ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:00 IST)
துபாயில் இருந்து இந்திய அணி நேராக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ஆஸி அணிக்கான அணியோடு இணைந்து செல்லவில்லை. பெங்களூரு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு சிகிச்சை பெற்று காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டால் மட்டுமே அவர் துபாய்க்கு செல்வார் என சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா சென்று சேர்ந்துள்ளது. அவர்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதன் பின்னர் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் அந்த வீரரை எடுங்கள்.. சிஎஸ்கே அணிக்கு அறிவுரை சொன்ன தோனி!

மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணியில் இந்த ஸ்டார் ப்ளேயர் இல்லையா?

அணிதான் முக்கியம்… தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்த ஷுப்மன் கில்!

ரிஷப் பண்ட் மட்டும் ஏலத்துக்கு வந்தால்…? ஆகாஷ் சோப்ரா சொன்ன தொகை!

நாயகன் மீண்டும் வர்றான்… கேப்டன் பதவியை ஏற்கிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments