Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு மூன்று வடிவ போட்டிகளுக்கும் புதிய ஜெர்ஸி அறிமுகம்… என்ன ஸ்பான்சர் பேரே இல்ல!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (15:12 IST)
இந்திய அணி இன்னும் சில நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டிக்காக இப்போது இங்கிலாந்தின் லண்டனில் தீவிர பயிற்சிகளை இரு அணிகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை அறிமுகப்படுத்தும் விதமாக வீரர்கள் புதிய ஜெர்ஸியை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. இந்த புதிய ஜெர்ஸியில் நீல வண்ணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் புதிய ஜெர்ஸியில் இந்திய அணி எந்த நிறுவனத்தின் ஜெர்ஸி ஸ்பான்சர் பெயரும் இடம்பெறவில்லை. புது ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இடம்பெறாது என தெரிகிறது. முன்னதாக இந்திய அணிக்கு பைஜூஸ் நிறுவனம் ஸ்பான்சராக செயல்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடியும் முன்னரே விலகிக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையும் பாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

கிரிக்கெட்டர்கள் PR குழு வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறது- ரஹானே ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments