Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (10:17 IST)
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் பேட்டிங், பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் பிரிவுகளில் அதிக இடங்களை பிடித்துள்ளனர்.

ஐசிசி கடந்த செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையை நேற்று அறிவித்துள்ளது. அதில் பேட்டிங் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஆசியக் கோப்பையில் விளையாடாத போதிலும் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி(884 புள்ளிகள்) தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ஆசிய கோப்பையில் கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா(842 புள்ளிகள்) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஷிகார் தவான்(802 புள்ளிகள்) 5-வது இடத்தில் உள்ளார்.

பௌலிங்கை பொறுத்தவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ரா(797 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்(700) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து(127) முதல் இடத்திலும் இந்தியா(122) இரண்டாவது இடத்திலும் உள்ளன. அடுத்து வரப்போகும் மேற்கிந்திய அணிக்கெதிரான தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடர் என இவற்றில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments