இந்திய வீரர் ரிஷப் பான்ட்டுக்கு தசைநார் அறுவை சிகிச்சை!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (16:47 IST)
கடந்தாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது,அவரது கட்டுப்பாட்டை மீறி, தடுப்பு பலகையின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டின் உடலின்  முதுகு, கால் முட்டியில் தசை நார் கிழிவு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: ரிஷப் பாண்டிற்கு ஓய்வு கிடைப்பதில்லை -குடும்பத்தினர் குற்றச்சாட்டு
 
இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர்  மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ குழிவில் உள்ள மருத்துவக் குழிவினரால் அவரது உடல் நிலையில் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷப் பாண்டுக்கு தசை நார் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகும்  நிலையில், இந்த சிகிசை எப்போது என்ற தகவலை விரைவில் அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என தெரிகிறது.

எனவே, அவர் விரைவில் குணமடையே வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments