Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து தாக்கி நடுவர் மரணம்: கிரிக்கெட் விளையாட்டில் தொடரும் சோகம்

Webdunia
ஞாயிறு, 30 நவம்பர் 2014 (16:03 IST)
ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த நிலையில், நடுவர் ஒருவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 
ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களே ஆன நிலையில், இஸ்ரேலில் லீக் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹிலல் அவாஸ்கர் என்ற நடுவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நடந்தது. இந்த போட்டி ஒன்றில் 55 வயதான ஹிலல் அவாஸ்கர் நடுவராக பணியாற்றினார். பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
 
மரணம் அடைந்த ஹிலல் அவாஸ்கர் சர்வதேச நடுவர் ஆவார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இஸ்ரேல் அணிக்கு கேப்டனாக இருந்து உள்ளார். அவாஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments