Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் ஆகிறார் சேவாக்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் ஆகிறார் சேவாக்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (12:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன விரேந்தர் சேவாக் விண்ணப்பித்துள்ளார்.


 
 
தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விருப்பம் இல்லை. இதனால் முன்னாள் வீரர் சேவாக்கை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது.
 
ஆனால் சூழ்நிலையை பொறுத்து இதுகுறித்து முடிவு செய்வதாக கூறியிருந்த சேவாக் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து சேவாக்கே புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments