Webdunia - Bharat's app for daily news and videos

Install App

U19 உலகக் கோப்பை; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

Arun Prasath
திங்கள், 20 ஜனவரி 2020 (10:23 IST)
சவுத் ஆஃப்ரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருகான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையுடனான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், தனது முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, 42.5 ஓவர்களில் 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 59 ரன்கள் குவித்தும், கேப்டன் ப்ரியம் கார்க் 72 பந்துகளில் 56 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினர். அதே போல் துருவ் ஜூரல் 48 பந்துகளில் 52 ரன்களும், சித்தேஷ் வீர் 27 பந்துகளில் 44 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றனர். இதனை தொடர்ந்து நாளை தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானுடன் இந்திய அணி மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments