Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

Prasanth Karthick
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (11:05 IST)

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியுள்ள நிலையில் இந்தியா டாஸ் வென்றுள்ளது.

 

 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் இன்று கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் போட தாமதமான நிலையில் தற்போது டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ப்ளேயிங் 11 வீரர்களே இந்த போட்டியிலும் தொடர்வார்கள் என கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

 

இந்திய அணி: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்ப்ரிட் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

 

வங்கதேச அணி : ஸகீர் ஹசன், ஷத்மன் இஸ்லாம், நஜ்முல் ஹுசைன் சாண்டோ, மொமினுல் ஹக், முஸ்தபிசூர் ரஹீம், ஷகீப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன், தைஜுல் இஸ்லாம், ஹசன் முகமது, கலீத் அகமது, 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments