Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க சாம்பியன்! : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (21:22 IST)
இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
 

 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. அதில், இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இதன் மூலம், மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில், இரண்டில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் [ஐசிசி] டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை இந்தியா மீண்டும் கைப்பற்றியுள்ளது.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments