Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா சாவா போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:35 IST)
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகியுள்ளது. பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது. இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இன்று இந்திய அணியை லக்னோவில் எதிர்கொள்ள உள்ளது இங்கிலாந்து அணி. இந்த போட்டியை இங்கிலாந்து அணி வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டியை தோற்கும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை சுத்தமாக இழந்துவிடும்.

இந்திய அணியோ இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்றுவிட்டது. இன்றைய போட்டியில் வென்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதனால் இன்றைய போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இலலாமல் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டி இன்றைய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments