Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஆவது ஒரு நாள் போட்டி: இந்தியா- இங்கிலாந்து இன்று பலப் பரீட்சை

2ஆவது ஒரு நாள் போட்டி: இந்தியா- இங்கிலாந்து இன்று பலப் பரீட்சை
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (12:12 IST)
இங்கிலாந்து மண்ணில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் (டி20) போட்டிகளில் விளையாட உள்ளது.
இதில் 2014 ஆகஸ்டு 25 அன்று பிரிஸ்டனில் நடைபெறவிருந்த முதல் நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இருஅணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இரண்டாவது ஒரு நாள் போட்டி, இன்று இங்கிலாந்தின் கார்டிஃப் (Cardiff) நகரில் நடக்க உள்ளது. டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பிய இந்திய அணி, ஒரு நாள் போட்டியில் தனது சிறந்த பங்களிப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
இந்திய வீரர்களை எடுத்துக்கொண்டால், தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும் ரோகித் ஷர்மாவும் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். 
 
தொடக்க ஆட்டக்காரர்கள், தங்களது சிறந்த பங்களிப்பின் மூலம் வலுவான தொடக்கத்தை அளித்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்.
 
பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் இங்கிலாந்து அணி வலுவாக உள்ளதால் இந்திய வீரர்களுக்குக் கடும் சவால் காத்திருக்கிறது என்றால் மிகையாகாது.
 
இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். இதன் நேரடி ஸ்கோர் விவரங்களை, வெப்துனியாவில் பாருங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil