Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரரை கெட்ட வார்த்தையால் திட்டிய ஆஸ்திரேலிய கேப்டன்: கேமராவில் சிக்கிய ஆதாரம்!

இந்திய வீரரை கெட்ட வார்த்தையால் திட்டிய ஆஸ்திரேலிய கேப்டன்: கேமராவில் சிக்கிய ஆதாரம்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (12:55 IST)
இந்தியா அஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய வீரர் முரளி விஜயை கெட்ட வார்த்தையால் திட்டியது கேமராவில் பதிவாகியுள்ளது.


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் நான்காவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட்டின் கேட்ச்சை பிடித்த முரளி விஜய் அவசர அவசரமாக பெவிலியனை நோக்கி ஓடினார்.

 
ஆனால் அந்த கேட்ச் முறையாக பிடிக்கவில்லை என மூன்றாவது நடுவர் உறுதி செய்ததால் இந்திய வீரர்கள் மீண்டும் வந்து விளையாடினர். அடுத்த பதிலேயே அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் முன்னதாக முரளி விஜய் பிடித்த கேட்ச்சை பெரிய திரையில் பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதுக்குள்ள என்ன அவசரம் திருட்டு பயலே என கூறி கூடவே ஒரு கெட்ட வார்த்தையும் கூறினார்.
 
ஸ்டீவ் ஸ்மித் கெட்ட வார்த்தை பேசியது கேமராவில் தெளிவாக பதிவாகியது. இதனால் அவருக்கு எதிராக ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்திய அணி சார்பில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

அடுத்த கட்டுரையில்
Show comments