Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுடெல்லி டெஸ்ட் - பள்ளிக் குழந்தைகளுக்கு 10 ரூபாயில் டிக்கெட்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (17:21 IST)
புதுடெல்லியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்கு பள்ளி குழந்தைகளுக்கு 10 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் டிசம்பர் 3ஆம் தேதி புதுடெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.
 
இந்தப் போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை ஓய்வு பெற்றநீதிபதியும், கண்காணிப்பாளருமான முகுல் முத்கல் நிர்ணயித்துள்ளார்.இதன்படி பள்ளி குழந்தைகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
ஒரு தினத்துக்கு ரூ.10 கட்டணம் வீதம் 5 நாட்களுக்கு ரூ.50 சீசன் கட்டணமாகும். சாதாரண ரசிகர்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.100 ஆகும். இதன் சீசன் டிக்கெட் ரூ.500 ஆகும்.
 
கார்ப்பரேட் பாக்சுகளுக்கான டிக்கெட் விலை ரூ.1000 ஆகும்.தில்லி கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே மோசடியில் சிக்கி இருப்பதால் இலவச டிக்கெட் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

Show comments