Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான நிலையில் இந்தியா; இலங்கைக்கு 322 ரன்கள் இலக்கு

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (19:22 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இலங்கைக்கு எதிராக போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.


 


 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிறகு 321 ரன்கள் குவித்தது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ரோகித் சர்மா 79 பந்துகளில் 78 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யுவராஜ் சிங் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 
 
ஒருபக்கம் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் தவான் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார். அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த தோனி ரன் குவிப்பத்தில் கவனமாக இருந்தார். அரை சதம் கடந்த தோனி 52 பந்துகளில் 63 ரன்கள் குவித்து வெளியேறினார்.
 
இதனிடையே தவான் சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 9 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் தோனியுடன் இணைந்து பொறுமையாக ஆடி வந்தார். கடைசி இரண்டு ஓவரில் அதிரடியாக அடித்து ஆடினார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 321 ரன்கள் குவித்தது.
 
அடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாட தொடங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments