Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய பந்து வீச்சின் லட்சணம் விரைவில் வெளிப்படும் - விவியன் ரிச்சர்ட்ஸ்

இந்திய பந்து வீச்சின் லட்சணம் விரைவில் வெளிப்படும் - விவியன் ரிச்சர்ட்ஸ்
, வெள்ளி, 6 மார்ச் 2015 (11:34 IST)
இந்திய அணியின் பந்து வீச்சின் லட்சணம் சிறந்த அணிக்கு எதிராக விளையாடும்போது வெளிப்படும் - விவியன் ரிச்சர்ட்ஸ்
 
நாடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பந்துவீச்சு விரைவில் வெளிப்படும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவியம் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
 

 
இதுகுறித்து கூறியுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ், ‘‘தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா அசைக்க முடியாத அணி என்றும், அனைத்து துறையிலும் முழுமை பெற்ற அணியாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.
 
இந்திய அணி பேட்டிங் துறையில் வலுவானதாக உள்ளது. அதேபோல் பந்து வீச்சிலும் பலத்துடன் திகழ்சிறது. இந்தியா அணி இந்த உலகக்கோப்பை முழுவதும் இவ்வாறு செயல்படுகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
ஆனாலும், இது போதுமானது அல்ல என்பது விரைவில் அவர்களை விளையாடுவதைப் பொறுத்து தெரியும். இந்திய அணிக்கு எதிராக ஏதாவது ஒரு அணி சிறந்த அணி விளையாடும்போது இது வெளிப்படும். மேலும், இது ஒரு எதிரணிக்கு சிறந்த வாய்ப்பாக அனையும்’’ என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil