யாரையும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது.. கங்குலி நம்பிக்கை!

vinoth
செவ்வாய், 4 மார்ச் 2025 (12:30 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.  இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடக்கின்றது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றது. அதன் பிறகு நடந்த எல்லா ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.

இந்த முறை ஆஸி அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் வலுக்குறைந்து காணப்பட்டாலும் நாக் அவுட் போட்டி என்பதால் அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிப் பற்றி பேசும்போது “இந்திய அணி சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது. அதனால் எதிரணி யாராக இருந்தாலும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments