Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி உலகக்கோப்பையைத் தக்க வைக்கும் - சவுரவ் கங்குலி

Webdunia
சனி, 17 ஜனவரி 2015 (17:45 IST)
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைத் தக்க வைக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
11ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளும் என்று கங்குலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது பேசிய சவுரவ் கங்குலி, “இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. விளம்பரத்துக்காக இதைச் சொல்லவில்லை.
 
ஒருநாள் தொடர் என்று வந்து விட்டால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது உறுதி. இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ளது. அதோடு, டெஸ்ட் தொடருக்கும், ஒரு நாள் தொடருக்கும் வித்தியாசம் உள்ளது.
 
டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை குறைவு. ஏற்கெனவே சொன்னதைப் போல, தற்போதைய இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Show comments