Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது ஒரு நாள் போட்டி; இந்தியா அபார தொடக்கம்: இலங்கையை பழி தீர்க்குமா?

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (13:05 IST)
இந்தியா வந்துள்ள இலங்கை அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வியை அடைந்தது.
 
இந்நிலையில் வெற்றியை தக்கவைக்க கூடிய முக்கிய போட்டியான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று காலை 11.30 மணியளவில் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் ஷர்மா, தவான் ஜோடி அருமையான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி 115 ரன்கள் எடுத்திருந்த போது பிரிந்தது. தவான் 67 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
தொடர்ந்து ரோகித் ஷர்மாவுடன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். ரோகித் ஷர்மா 47 ரன்கள் அடித்து தொடர்ந்து பொறுப்பாக ஆடி வருகிறார். இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
 
சிறப்பான தொடக்கம் அமைந்ததுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி பெரிய இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments