Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்பியன் பட்டத்தை இந்தியாவால் தக்கவைக்க முடியாது - டேவிட் வார்னர்

சாம்பியன் பட்டத்தை இந்தியாவால் தக்கவைக்க முடியாது - டேவிட் வார்னர்
, செவ்வாய், 13 ஜனவரி 2015 (15:43 IST)
வரும் உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்தியாவால் தக்கவைக்க முடியாது என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
 
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 14 அணிகள் பங்கேற்கும் 11ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பிப்ரவரி 15 ஆம் தேதி சந்திக்கிறது.
 

 
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அளித்துள்ளப் பேட்டியில், “சமீபத்தில் முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தொடருக்கு அமைக்கப்பட்ட ஆடுகளங்களுக்கும், உலக கோப்பை போட்டிக்கு தயாரிக்கப்படும் ஆடுகளங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
 
அதிகளவில் பந்துகள் பவுன்ஸ் ஆகும் வகையில் ஆடுகளங்கள் அமைப்பதில் ஆஸ்திரேலிய பராமரிப்பாளர்கள் உலக அளவில் தலை சிறந்தவர்கள். அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலம் அளிக்கும் வகையில் பிட்ச்சை நிச்சயம் அளிப்பார்கள். இது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமையும்.
 
ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பவுன்ஸ் அதிகம் ஆகும் ஆடுகளங்களில் விளையாட தடுமாறுவார்கள். நடப்பு சாம்பியனான இந்திய அணி, உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தங்க வைக்க முடியாது.
 
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி சந்திக்க வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil