Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாப்வே அபார தோல்வி - தொடரை கைப்பற்றியது இந்தியா

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (18:05 IST)
இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 

 
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி இந்திய அணி வென்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக உசி சிபண்டா 53 ரன்களும், சிபாபா 21 ரன்களும், சிக்கந்தர் ரஸா 16 ரன்களும் எடுத்தனர்.
 
மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். ஒருகட்டத்தில் 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஓரளவு வலுவான நிலையில் இருந்தது. ஆனால், மேற்கொண்டு 20 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
 
இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், பரிந்தர் சரண், தவன் குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
 
பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் 33 ரன்களிலும், கருண் நாயர் 39 ரன்களும் எடுத்து வெளியேறினர். இருந்தபோதிலும் இந்திய அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அம்பதி ராயுடு 41 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments