Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; தொடரும் தோல்வி வரலாறு

பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; தொடரும் தோல்வி வரலாறு

பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; தொடரும் தோல்வி வரலாறு
, ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (14:53 IST)
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 

 
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக சர்ஃப்ராஸ் கான் 25 ரன்களும், குர்ரம் மன்சூர் 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள், அனைவரும் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோயப் மாலிக் (4), உமர் அக்மல் (3), அஃப்ரிடி (2), என வந்ததும் வெளியேறினர். இதனால், ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். உதிரிவகையில் இந்திய அணி விட்டுக்கொடுத்த 15 ரன்களே பாகிஸ்தான் அணியின் இரண்டாவது அதிகப்பட்சமாகும்.
 
அதே சமயம் இந்திய அணியின் பந்துவீச்சிலும் அணல் பறந்தது. ஜாஸ்பிரிட் பும்ரா 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதில் 2 ஓவர்கள் மெய்டன் ஓவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல ஹர்த்திக் பாண்டியா 3.3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
 
பின்னர், எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோதித் சர்மா (0), அஜிங்கே ராஹானே (0), சுரேஷ் ரெய்னா (1) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி மொஹமது அமிர் அதிர்ச்சி அளித்தார்.
 
ஆனால், விராட் கோலி, யுவராஜ் சிங் இணை அணியின் வீழ்ச்சியை தடுத்தது. அரைச்சதத்தைக் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 49 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஹர்த்திக் பாண்டியாவும் (0) வெளியேறினார். கடைசியாக இறங்கிய கேப்டன் தோனி பவுண்டரி அடித்து வெற்றி ரன்னை எட்டினார்.
 
இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால், உலக்கோப்பை போட்டிகள் உள்ளிட்ட பெரிய அளவிலான தொடர்களில் பாகிஸ்தான் தோல்வி தொடர்ந்து நீடித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil