Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் T20 போட்டி : இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் நாளை பலப்பரீட்சை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2015 (13:24 IST)
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறுகிறது.



இந்தியாவுக்கு எதிரான 3 டி20,  5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த 28 ஆம் தேதி இந்தியா வந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறுகிறது.  இதனிடையே இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை முடித்துக் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி நேற்று தர்மசாலாவுக்கு சென்றடைந்தது.

இன்று மாலை இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதனிடையே  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் தங்களுக்கு கைகொடுக்கும் என தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான போட்டிகள், மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா பெயரில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காந்தியின் பிறந்த தினமான நாளை, முதல் கிரிக்கெட் தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

Show comments