Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களின் சாதனைகள்

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2015 (07:16 IST)
நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அரங்கேற்றிய சில சாதனை துளிகள்.


 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
 
இதில் இந்திய அணி  2 டெஸ்டில் தோற்றது. பின்னர் 2 டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அபாரமாக செயல்பட்ட கோலி 692 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். மேலும் அதிகபட்சமாக 169 ரன்கள் குவித்துள்ளார். 
 
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் 1 சதம், மற்றும் 4 அரைசதத்துடன் 482 ரன்கள் குவித்தார். ரகானே 1 சதம், 2 அரை சதத்துடன் 399 ரன் எடுத்தார். பந்து வீச்சாளர்களில் ஷமி 15 விக்கெட்டுகளையும், அஸ்வின் 12 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments