Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND- AUS- 1st ODI- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (21:52 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தார்..

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸி அணியில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 ஜோஸ் 26 ரன்னிலும்,ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  எனவே, ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயித்தது.

இந்திய அணி சார்பில் ஷமி மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜடேஜா 2 விக்கெட்டும், பாண்ட்யா 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், கே.எல்.ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும், பாண்ட்யா 25 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தனர்.

இதனால், இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments