Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் ....- ரஷீத் லத்தீப் தகவல்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (19:59 IST)
விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி 100 சதவீதம் உலகக் கோப்பைக்கு தயாராக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.
 
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது.

சமீபத்தில் இதற்கான அட்டவணையை ஐசிஐசி வெளியிட்டது

இதன் படி அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி தொடங்க உள்ளது. கடைசி லீக் போட்டி நவம்பர் 12ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது

முதல் செமி பைனல் நவம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது செமி பைனல் நவம்பர் 16ஆம் தேதி இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி 100 சதவீதம் உலகக் கோப்பைக்கு தயாராக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

''இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதித்து வருகிறது. தேர்வு முறையில் தற்போது திணறி வருவதால்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 20 தொடரை இழந்தது.

உலகக் கோப்பையிலும் சீனியர் வீரர்களை நம்பித்தான் உள்ளது இந்திய அணி. விராட் கோலியை கேப்டனாக  நீடிக்க அனுமதித்து இருந்தால், உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி  100 சதவீதம் தயாராக இருந்திருக்கும் ‘’என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments