Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

Prasanth Karthick
ஞாயிறு, 23 மார்ச் 2025 (17:43 IST)

நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

 

டாஸ் வென்று ராஜஸ்தான் பவுலிங் எடுத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கியது. இந்த சீசனில் மும்பை அணியிலிருந்து சன்ரைசர்ஸ் அணிக்கு வந்த இஷான் கிஷன், சன்ரைசர்ஸுக்கான தனது முதல் போட்டியிலேயே 106 ரன்களை அடித்துக் குவித்து அனைவரையும் வாய்ப்பிளக்க செய்துள்ளார். பேட் கம்மின்ஸின் அபாரமான கேப்பிடன்ஸியில் அடித்து வெளுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை அடித்துக் குவித்துள்ளது.

 

கடந்த சீசன் வரை ஆர்சிபியின் 263 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு போட்டியில் அதை சன்ரைசர்ஸ் மூன்று முறை முறியடித்தனர். தற்போது நான்காவது முறையாக அதிகபட்ச ஸ்கோராக 286 ரன்களை குவித்துள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோருக்கான தர வரிசையில் ஆர்சிபியை பின்னுக்கு தள்ளி முதல் 5 இடங்களில் 4 இடங்களை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது சன்ரைசர்ஸ்.

 

சன்ரைசர்ஸின் இந்த இமாலய இலக்கான 287 என்ற டார்கெட்டை ராஜஸ்தான் சேஸ் செய்ய முடிந்தால் ஐபிஎல்லில் அதிகபட்ச ரன் சேஸாகவும், அதிகபட்ச ரன்களில் சன்ரைஸர்ஸை சமன் செய்த சாதனையையும் ராஜஸ்தான் ராயல்ஸ் படைக்க முடியும். அப்படி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments