Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ அந்த விதியை அமல்படுத்தினால்தான் தோனியை சிஎஸ்கே தக்க வைக்க முடியுமா?

vinoth
சனி, 17 ஆகஸ்ட் 2024 (07:44 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணி தங்கள் கடைசி லீக்  போட்டியில் ஆர் சி பி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிகச்சிறந்த பினிஷரான தோனி இருந்த போதும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்த போட்டி முடிந்த போது மிகவும் அதிருப்தியோடு காணப்பட்டார். அவர் அணி வீரர்களோடு கூட அதிகமாக எதுவும் பேசவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பிசிசிஐ ஒரு புதிய விதியை அமல்படுத்த உள்ளதாகவும் அதை அமல்படுத்தினால்தான் தோனி சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டு ஆனவர்களை ‘அன்கேப்ட்’ வீரராக அறிவிக்க உள்ளதாகவும், அப்படி அறிவித்தால் தோனியை சிஎஸ்கே அனி “அன்கேப்ட் பிளேயர்” பிரிவில் தக்கவைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments