Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி அறியாத கேப்டன் ரோஹித் சர்மா! – ஐசிசி 20 ஓவர் தரவரிசையில் இந்தியா!

Webdunia
புதன், 4 மே 2022 (15:34 IST)
ஐசிசி சர்வதேச டி 20 போட்டிகளின் ஆண்டு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா அணி நான்காவது இடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments