Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதான தடையை நீக்கிய ஐசிசி!

vinoth
திங்கள், 29 ஜனவரி 2024 (13:34 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர், இலங்கை அணியின் தொடர் தோல்வியால் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய கிரிக்கெட் குழுவை கலைத்துவிட்டு, ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவை  நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது தற்காலிக தடையை விதித்தது. இது சம்மந்தமான செய்திக் குறிப்பில் “இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் வாரிய  நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு  உறுதிப்படுத்த வேண்டும்'' எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் இப்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியுள்ளது ஐசிசி. இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments